'ஹைஜேக்' செய்யப்பட்டதா 'எண்ணெய்' கப்பல்...? 'கொஞ்ச நேரத்துலையே நடந்த டிவிஸ்ட்...' 'குழப்பத்துக்கு மேல் குழப்பம்...' - என்ன தான் நடந்துச்சு...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈரானின் எண்ணெய் கப்பல் மர்மமான முறையில் கடத்தப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஆஸ்பால்ட் பிரின்சஸ்' என்ற எண்ணெய் கப்பல் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜிரா துறைமுகத்தில் இருந்து கிளம்பி ஓமன் வளைகுடா கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென அக்கப்பல் கடத்தல் கும்பலால் வழிமறிக்கப்பட்டு, கப்பலை ஈரான் நோக்கி செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். அதன்பின் கப்பலும் ஈரான் நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்த நிலையில், இங்கிலாந்து ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு, 'கப்பல் தற்போது பாதுகாப்பாக இருக்கிறது' என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் கடத்தப்பட்டது தொடர்பான எந்த அறிவிப்பும், விவரங்களையும் வெளியிடவில்லை.

கப்பல் திடீரென வழிமறிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒரு பகுதியை சொல்லி மீண்டும் திரும்பி அனுப்பப்பட்ட சம்பவம் உலகளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. செயற்கைக்கோள் ஆதாரங்கள் மூலமாக சோதனை செய்து பார்த்தபோது, இந்த கப்பல் ஜாஸ்க் துறைமுகத்தில் இருந்து நேற்று (04-08-2021) அதிகாலை ஈரான் கடல் பகுதியை நோக்கி நகர்வதாக அடையாளம் காட்டியது.

இருப்பினும் மர்மமாக நடந்த இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டதும், விடுவிக்கப்பட்டதும் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் கப்பல் கடத்தலுக்கு ஈரான்தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளன.

இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்த நிலையில், ஈரான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் காதீப்சாடேவும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சமீபகாலமாக கப்பல்களின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் முழுவதும் சந்தேகத்துக்குரியது. இதில், ஈரான் எந்த பங்கும் வகிக்கவில்லை' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்