"உயிரிழப்புகளை மூடி மறைக்கிறது ஈரான்..." அங்கு 'கொரோனா' 'கோரத்தாண்டவம்' ஆடிவிட்டது.... அதிர்ச்சியளிக்கும் 'சாட்டிலைட்' 'புகைப்படங்கள்'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அந்நாடு மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 132க்கும் அதிகமான நாடுகளில் பரவி, உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரசால் உலக அளவில், 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,436 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடாக இத்தாலி உள்ளது. இங்கு பொதுமக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். 3வதாக ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 12,729 பாதிக்கப்பட்டு, 611 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஈரானில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், ஏராளமானோர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் கோம் நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 'கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரானின் சுகாதார அமைச்சகம் பொய் கூறுகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க மிகப்பெரும் குழிகள் தோண்டப்பட்டுள்ள தகவல், சாட்டிலைட் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த் ஃபிப்ரவரி மாதம் வெளியான இந்த புகைப்படத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை மூட்டைகளாகக் கட்டி, ஒரு பிரம்மாண்டக் குழியில் புதைப்பது போன்ற படங்கள் காணக்கிடைக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த மேக்சர் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி ஆய்வு மையம், இந்த சாட்டிலைட் படங்களை வெளியிட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பெஹெஷ்ட்-இ -மசூமே கல்லறையின் படங்கள் அவை. மார்ச் 1ம் தேதி இரண்டு புதிய பிரம்மாண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு குழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளன.
இதனால், ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அந்நாடு மூடி மறைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. ஆனால், ஈரான் சுகாதார துறை, இதுகுறித்து எந்த விளக்கத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
- 'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப்' புதிய 'மசோதா'...
- 'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
- 'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...
- 'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'
- “நோய் வந்தா கடவுள்கிட்டதான் வேண்ட முடியும்!... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா? பகுத்தறிவா? ஆன்மீகமா?”.. ட்விட்டரில் ஆ.ராசா கேள்வி!
- சீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...
- 'அடிமேல அடி'... 'வேகமாக பரவும் லாசா காய்ச்சல்'... '144 பேரின் உயிரை' காவு வாங்கிய கொடூரம்!
- ‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்!’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு!
- "எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்..." "வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு..." அடம்பிடிக்கும் இந்திய வீரர்...