எங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில்  கடந்த சில தினங்களுக்கு முன்  அமெரிக்கப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படை  தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயைடுத்து ஈரான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படையினரை தீவிரவாதிகள் என ஈரான் அறிவித்தது. சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும என்றும் அந்நாட்டு அரசு உறுதி பூண்டது.

இந்நிலையில், அமெரிக்க மேலும் படை வீரர்களை ஈராக்கில் குவித்து வருகிறது. அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற ஈரானின் வலியுறுத்தலையும் அமெரிக்கா மறுத்து விட்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், ஈராககில் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. ஈரானின் தாக்குதலில் தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

AMERICA, IRAN, MISSILE ATTACK, US FORCE, ATTACKED VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்