"பெண்கள் இனி விளம்பரங்களில் நடிக்க கூடாது".. வினோத அறிவிப்பை வெளியிட்ட நாடு.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு சம்பவம் தானாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண்கள் இனி விளம்பரங்களில் நடிக்க கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது ஈரான். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

ஈரான்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல விதிகள் அங்கே விதிக்கப்பட்டு அவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ஹிஜாப் விவகாரம். ஈரானில் 9 வயது பூர்த்தியான அனைத்து பெண்களும் ஹிஜாப் அணியவேண்டும். இந்நிலையில், சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்றில் அதில் நடித்திருக்கும் பெண் ஹிஜாப் அணியவில்லை என அந்நாட்டு அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

விளம்பரம்

பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமீபத்தில் ஈரானில் வெளியாகியிருக்கிறது. அதில் பெண் ஒருவர் காரில் தனியாக பயணிக்கிறார். கார் மலை பகுதியில் சென்று நிற்கிறது. அதிலிருந்து கீழே இறங்கும் அந்த பெண், சீட்டில் தான் வைத்திருந்த ஐஸ் கிரீமை சுவைக்கிறார். இதேபோல இன்னொரு விளம்பரம் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதிலும் பெண் ஒருவர் ஐஸ்கிரீமை ருசிக்கிறார். இந்த விளம்பரத்தில் நடித்திருந்த அந்த பெண், ஹிஜாப் அணியவில்லை எனவும் இது பாலியல் உணர்வுகளை தூண்டும் படியாக இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், அந்த ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மதகுருமார்கள் வலியுறுத்திவருவதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த விளம்பரம் "கண்ணியத்திற்கு எதிரானது" என்றும், "பெண்களின் மதிப்புகளை அவமதிக்கிறது" என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தடை

இந்த சூழ்நிலையில், ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பயிலகங்களுக்கு எழுதிய கடிதத்தில், "ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின்படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை" என்று கூறப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

IRAN, ICECREAM, ADVERTISEMENT, ஈரான், விளம்பரம், ஐஸ்கிரீம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்