'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தைகள் என்றாலே குறும்பு தனம் தான்.ஆனால் நமது கவனக்குறைவால் அந்த குறும்பு தனங்கள் சில நேரங்களில் எல்லை மீறி போவது உண்டு.அதற்கு அந்த குழந்தைகளை நாம் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.அதற்கு முழு பொறுப்பும் அந்த பெற்றோர்களையே சாரும்.தற்போது அமெரிக்கவில் நடந்துள்ள இந்த சம்பவம் அதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்.

இங்கிலாந்தின் லண்டன் நகரத்தை சேர்ந்தவர் இவான் ஆஸ்நாஸ். இவர் ‘தி நியூ யார்கர்’ என்ற வாரம் இருமுறை வெளியாகும் அமெரிக்க பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்.ஐ-பேட்டை தொடர்ந்து பயன்படுத்தும் இவர்,தனது அலுவலகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அந்த ஐ-பேட்டில் பதிவேற்றி வைத்திருந்தார்.அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த அவர் ஐ-பேட்டைதனது அறையில் வைத்துவிட்டு வேறு பணிகளை கவனிக்க சென்று விட்டார்.

அப்போது இவானின் 3 வயது குழந்தை ஐ-பேட்டை எடுத்து தவறுதலாக பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளது.குழந்தைக்கு அதுகுறித்து தெரியாததால் மீண்டும் தவறுதலாக பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளது.குழந்தையின் இந்த செயலால் அவரது ஐ-பேட் 25,536,442 நிமிடங்கள் முடங்கியுள்ளது.

அதாவது 48 வருடங்கள் முடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த இவான் ஆஸ்நாஸ்,இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இதற்கு ஆலோசனை கூறுங்கள் என ட்விட்டரில் கேட்டுள்ளார்.

TWITTER, APPLE, APPLE IPAD, 48 YEARS, IOS DEVICE, EVAN OSNOS ‏ VERIFIED ACCOUNT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்