யூடியூபை வாங்குங்க..எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்.. எல்லாம் மஸ்க் போட்ட ஒத்த Meme-னால வந்தது..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீம் தற்போது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் அடிக்கடி மோசடியான விளம்பரங்கள் ஒளிபரப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீம்

எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் யூடியூப் இடைவிடாத மோசடி விளம்பரங்களை ஒளிபரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீம் ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து எலான் மஸ்க்கின் இந்த பதிவில் நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அவற்றுள் பெரும்பான்மையானோர், "யூடியூப்பை வாங்கிவிடுங்கள்" என எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

ட்விட்டர் டீல்

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம், ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்கவில்லை எனில், அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் மஸ்க். இந்நிலையில் யூடியூப் விளம்பரங்கள் குறித்து மஸ்க் போட்ட ட்வீட் வைரலாக பரவிவருகிறது.

ELONMUSK, TWITTER, YOUTUBE, எலான்மஸ்க், ட்விட்டர், யூடியூப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்