"ரஷ்யாவுக்கு எதிரா..நாங்க ஜெயிச்சுட்டோம்".. உக்ரைன் அதிபர் மகிழ்ச்சி.. ஓஹோ இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தவிட்டுள்ளது. இதனை உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கி வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

ரஷ்யா தாக்குதல்

நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்திருந்தது. இதனை கடுமையாக எதிர்த்துவந்தது ரஷ்யா. இதன் இடையே உக்ரைன் மீது சிறப்பு ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்ய பாராளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கோரிக்கையை பாராளுமன்றம் ஏற்கவே, பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் புதின்.

எதிர்வினை

உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்த புதினை அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய மேற்கு உலக நாடுகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. மேலும், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் இந்நாடுகள் விதித்து உள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் இனப் படுகொலைகளை ரஷ்யா நடத்தி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது உக்ரைன்.

சர்வதேச நீதிமன்றம்

'International Court of Justice' எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து புகார் அளித்தது உக்ரைன். இது தொடர்பான விசாரணையில் ரஷ்யா பங்கேற்காத நிலையில், நேற்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது நீதிமன்றம்.

சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில்,"உக்ரைன் பிரதேசத்தில் பிப்ரவரி 24, 2022 அன்று தொடங்கிய இராணுவ நடவடிக்கைகளை ரஷ்ய கூட்டமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவேற்பு

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை வரவேற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் உக்ரைன் முழு வெற்றி பெற்றுள்ளது. படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. ரஷ்யா உடனடியாக இதற்கு இணங்க வேண்டும். இந்த உத்தரவைப் புறக்கணிப்பது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரில், தற்போது சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு உத்தரவிட்டு இருப்பது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

RUSSIA, UKRAINE, WAR, ICJ, உக்ரைன், ரஷ்யா, போர், சர்வதேசநீதிமன்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்