ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா..? இவ்வளவு நாளா இதுதெரியாம போச்சே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிறரை ஏமாற்றும் தினமாகவே கருதப்படும் ஏப்ரல் 1-ம் தேதி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வரலாற்றில் இருக்கின்றன.

Advertising
>
Advertising

திருமண செலவுக்கான தொகையை தரவேண்டும்.. நீதிமன்றத்திற்கு சென்ற மகள்.. கோர்ட் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!

ஏப்ரல் 1

பொதுவாகவே நமது பள்ளி பருவங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று சக மாணவர்களை ஏமாற்றி இருப்போம். இது பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது பல வயது உடைய மக்களையும் ஈர்க்கும் தினமாக அமைந்திருக்கிறது.பிறரை ஏமாற்றுவதற்காகவே ஒரு தினம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்? அதற்கு சில கதைகள் வரலாற்றில் இருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் அரசராக இருந்த ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதத்தின் இறுதி வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாம். இந்த நாட்களில் தினமும் விருந்துகள், கேளிக்கைகள் என களைகட்டும் இந்த திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி புத்தாண்டன்று நிறைவடையும். பிரான்ஸ் மற்றும் அதை ஒட்டி இருந்த பகுதிகள் அனைத்திலும் ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக மக்கள் கொண்டாடி வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புது கேலண்டர்

தற்போது நாம் கிரிகோரியன் காலண்டர் இன்னும் நாட்காட்டியை தான் பயன்படுத்தி வருகிறோம். இதனை 1562 ஆம் ஆண்டு போப் கிரிகோரி நடைமுறைப்படுத்தினார். அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி ஆண்டின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பண்டைய காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததன் காரணமாக கிரிகோரியனின் இந்த அறிவிப்பு உலகத்தின் பல்வேறு நாட்டு மக்களை சென்றடைய அதிக காலம் பிடித்தது சொல்லப்போனால் ஐரோப்பாவிற்கு உள்ளேயே இந்தத் தகவல்கள் பரவ ஆண்டுக்கணக்கில் ஆகியுள்ளன.

இந்நிலையில் போப் கிரிகோரியன் புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொண்டவர்கள் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட துவங்கினர். பழைய வழக்கப்படி ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் மக்களை கேலி செய்யும் விதமாக அவர்களுக்கு வைக்கோல், பேப்பர் துண்டுகள், குதிரை சாணம் ஆகியவற்றை பரிசு போல அலங்கரித்து அனுப்பி வைப்பார்களாம். இதுவே பின்னாளில் எல்லா நாடுகளுக்கும் பரவி ஏப்ரல்1 ஆம் தேதி பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து இருக்கிறதாக பலர் கூறுகின்றனர்.

இந்த புகழ்பெற்ற ஏப்ரல் 1 ஆம் தேதி குறித்து இன்னொரு பிரபல கதையும் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அங்கு உள்ள ஆறுகளில் அதிக அளவில் மீன் கிடைக்குமாம். அப்போது தூண்டில்கள் மற்றும் வலைகளில் மீன்கள் ஏமாந்து போய் சிக்கிக் கொள்வதை குறிப்பிடும் நாளாக அந்த மக்கள் கருதியுள்ளனர். இதுவே பின்னர் மனிதர்களை ஏமாற்றும் தினமாக மாறியுள்ளதாகவும் ஒரு கதை இருக்கிறது. இதில் எது உண்மை எனத் தெரியவில்லை. எது எப்படியோ கொண்டாடுவதற்கும் புன்னகை செய்வதற்கும் ஒரு தினம் இருந்தால் சரிதானே..

அமரேந்திர பாகுபலிக்கே Tough கொடுக்கும் தாத்தா.. வைரல் வீடியோ..!

HISTORY BEHIND APRIL 1, APRIL 1 CELEBRATIONS, FOOLS DAY, ஏப்ரல் 1

மற்ற செய்திகள்