“சீக்ரெட் அறை எண் 39-ல் இதெல்லாம் நடக்குதா?”.. உலக நாடுகளை அடுத்தடுத்து உறைய வைக்கும் வடகொரிய மர்மங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான நிதியை திரட்டவும், பயன்படுத்தப்பட்டு வருவதாக அறை எண் 39 என்கிற அமைப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி கிடுகிடுப்பைக் கிளப்பியுள்ளன.
கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் அவரது கணவருக்கு மட்டுமே இந்த அறையும் இந்த அறை சார்ந்த அமைப்பின் முழு பொறுப்பும் உரித்தானது என்று கூறப்படும் நிலையில், அறை எண் 39 என்று அறியப்படும் இந்த அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் போதை மருந்து, தங்கம் கடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகளிலிருந்து சுமார் 1.6 பில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 4 மில்லியன் பவுண்டுகளை சொத்துக்களாகக் கொண்ட கிம் ஜாங் உன், தனக்கென சொந்தமாக ஒரு தீவு ஒன்றையே தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அந்த மாளிகையின் கீழ், தனிப்பட்ட ரயில் நிலையம் ஒன்றை அமைத்து தனது மாளிகைக்கு அந்த சொகுசு ரயிலை மட்டுமே பயன்படுத்திச் சென்று வருவதாகவும், இவற்றைத் தவிர, ஆடம்பர படகு ஒன்றையும் பயன்படுத்தி வருவதாகவும், பொதுவாகவே அவர் கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்றாலும், விலையுயர்ந்த கார்களின் வரிசை ஒன்றையும் அவர் பராமரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம் கடத்துதல், போதை மருந்துகள், பெரிய அளவிலான மெத் மற்றும் ஹெராயின் உற்பத்தி உள்ளிட்ட பணிகளும், 1970 முதல் உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து வடகொரியாவை மீட்க உருவாக்கப்பட்ட இந்த அறை எண் 39 அமைப்பு வழியாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவில் தயாராகும் போதை மருந்துக்கு ஜப்பான், சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்த வரவேற்பினால் 2003ஆம் ஆண்டு சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்து குவியலை வடகொரிய கப்பலில் இருந்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், இதேபோல் 2005 ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், வட கொரியாவில் இருந்து தயாரான போலி வயாக்ரா மாத்திரைகள் மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்ததை ஜப்பான் சுட்டிக்காட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வட கொரியாவில் இருந்து தயாராவதாகக் கூறப்படும் போலி டாலர் தாள்களை இதுவரை யாரும் கண்டு பிடித்ததில்லை என்றும், ஆனால் அமெரிக்காவில் வட கொரியாவில் இருந்து சென்ற 100 டாலர் தாள்கள், சுமார் 82 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு புழக்கத்தில் இருந்ததாகவும், இதேபோல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பிரான்ஸ், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் புழக்கத்தில் விடப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் பலவும் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டது என்றும், இவை வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாயைப் பெற்றுத் தருவதாகவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 'மாயமாகி ' போன கிம்... உண்மையிலேயே 'உயிரோட' தான் இருக்கிறாரா?... வலுவான 'ஆதாரங்களை' முன்வைக்கும் வல்லுநர்கள்!
- எல்லா நாடுகளும் உயிர் பொழச்சா போதும்னு இருக்கையில... ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு!.. என்ன நடக்கிறது வட கொரியாவில்?
- "அமெரிக்கா நம் மீது பொருளாதார தடை விதிச்சிருச்சு!".. "நமக்கு இருக்குற ஆப்ஷன் இதான்!".. 'கிம்' எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டு மழை!
- 'சர்வாதிகாரி!'..'சக்திவாய்ந்தவர்!'.. 'சாதுவானவர்!'.. வடகொரிய அதிபரைச் சுற்றியிருக்கும் 3 வலிமை மிக்க பெண்கள்!".. வைரல் ஆகும் பரபரப்பு தகவல்கள்!
- 'கலக்கிட்டீங்க தல' சீன அதிபரை புகழ்ந்து தள்ளிய 'வடகொரியா' அதிபர்... என்ன காரணம்?
- திரும்பி வந்ததும்... தெறிக்கவிட்ட 'கிம்'!.. கொரியா எல்லையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
- ‘பல்வேறு யூகங்களுக்கு மத்தியில்’... ‘40 ஆண்டுகள் புறக்கணிப்பிற்குப் பின் வெளிவரும்’... ‘வடகொரியா அதிபரின் சித்தப்பா பெயர்’... ‘என்ன காரணம்?’
- மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!
- கிம் ஜாங் உன்_க்கு கொரோனவா...? 'ஏன்னா அந்த ஃபங்ஷனுக்கே அவர் வரல....' தென்கொரிய அமைச்சர் தகவல்...!
- 'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா?...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'