'எனக்கு மருந்து போடுவீங்களா'?... 'யோவ்'... 'நீ தான் யா 'மனுஷன்'... இணையத்தை கலக்கிய வீடியோ !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அடிபட்டு தனது கடைக்கு வந்த நாய்க்கு, மருந்து கடைக்காரர் செய்த உதவி பலரையும் கலங்க வைத்துள்ளது. இவர் தான் உண்மையான விலங்குகளின் காவலர் என நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பானு செங்கிஸ் என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். விலங்குகளின் மீது அதிக அன்பு கொண்ட இவர், தனது கடையில் தெரு நாய்கள் வந்து இளைப்பாற படுக்கைகள் வைத்துள்ளார். இந்நிலையில் தெரு நாய் ஒன்று அவரது கடைக்குள் நுழைந்திருக்கிறது. ஆனால் அந்த நாய் படுக்கைக்கு செல்லாமல் செங்கிஸையே பார்த்து கொண்டு இருந்திருக்கிறது.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து டோடோ என்ற இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ''அந்த நாய் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நான், எதாவது பிரச்னையா என அதனிடம் கேட்டேன். அப்போது தான் புரிந்தது,அதற்கு காலில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது'' என செங்கிஸ் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நாய்க்கு செங்கிஸ் சிகிச்சை அளித்தார்.

இந்நிலையில்  நடந்த சம்பவம் குறித்து தான் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் செங்கிஸ் நாயுடன் உரையாடும் காட்சிகள் தெளிவாக தெரிகிறது. மேலும் காயத்திற்கான சிகிச்சை முடிந்த பின்பு செங்கிஸ் அருகிலேயே நாய் படுத்து கொண்டது. அது அவருக்கு நன்றி சொல்வது போல இருந்தது. தற்போது வரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.

TWITTER, STRAY DOG, PHARMACY, INJURED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்