"மனித உடலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள் அங்க இருக்கு".. ஆராய்ச்சியாளர்களை திகைக்க வச்ச சிறுகோள்.. வரலாற்றிலேயே முதல் முறையாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனித உடலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள் சிறுகோள் ஒன்றில் இருப்பதை கண்டறிந்துள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இதன்மூலம், பூமிக்கு வெளியே முதன் முறையாக மனித உடலுக்கு தேவையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான் இன்னும் இளமையா தான் இருக்கேன்".. சிங்கிளா பசிபிக் பெருங்கடலை கடந்த தாத்தா.. இந்த வயசுல இப்படி ஒரு சாதனையா?

சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கோள்கள் மட்டுமல்லாது சிறு, குறுங்கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன. இப்படி பூமிக்கு அருகில் பயணிக்கும் விண்கற்கள் சில சமயங்களில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறுகோள் ஒன்றிலிருந்து பூமிக்கு வந்த விண்கல்லை ஆய்வு செய்ததில் அதில் பல்வேறு முக்கிய பொருட்கள் இருப்பதை கண்டு திகைத்துப்போயிருக்கின்றனர்.

ஹயபுசா2

பூமி எவ்வாறு உருவானது, உயிரினங்கள் வளர்ச்சி அமைந்த விதம் குறித்து ஆராய்வதே இந்த ஹயபுசா2 திட்டமாகும். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் ரியுகு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்கையில் அதில் வாழ்க்கைக்கான முக்கிய பொருட்கலான அமினோ அமிலங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா, ரியுகு சிறுகோளில் கரிம பொருட்கள் மற்றும் 20 அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதிசெய்துள்ளது.

அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள் அடிப்படையில் மூலக்கூறுகள் ஆகும், அவை புரதங்களை உருவாக்குகின்றன. இந்த மூலக்கூறுகள் உயிரினங்களுக்கு மிக அவசியமானவை, ஏனெனில் அவை உணவு, வளர்ச்சி, உடல் திசுக்களை சரிசெய்தல் மற்றும் பல உடல் செயல்பாடுகளைச் செய்ய இவை உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் இவை உடலுக்கு ஆற்றலின் ஆதாரமாகவும் திகழ்கின்றன.

முதன்முறையாக ரியுகு சிறுகோளில் இருந்து பூமியில் வந்து விழுந்த கல்லில் குறைவான அமினோ அமிலங்களே இருந்தன. அவை வளிமண்டலத்திற்குள் கல் நுழையும்போது ஏற்பட்ட வெப்பத்தால் பாதிப்படைந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹயபுசா2 திட்டத்தின் மூலம், சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 20 க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய புவி அறிவியல் பேராசிரியர் ஹிசாயோஷி யூரிமோடோ,"ரியுகு-வில் எடுக்கப்பட்ட மாதிரி நாம் இதுவரை ஆய்வு செய்த சூரியக் குடும்பத்தில் மிகவும் பழமையான பொருள். Ruygu என்பது ஒரு CI காண்ட்ரைட் சிறுகோள் ஆகும், இது சூரியனைப் போன்ற இரசாயன கலவையுடன் கூடிய ஒரு வகை கார்பன் நிறைந்த சிறுகோள் ஆகும். இந்த சிறுகோள்கள் , நீர் மற்றும் கரிமப் பொருட்களால் நிறைந்தது. பூமியின் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதைவிளக்க இந்தக் கல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்" என்றார்.

முதன்முறையாக பூமிக்கு வெளியே, கரிம மற்றும் அமினோ அமிலங்கள் கன்டுபிடிக்கப்பட்டிருப்பது விண்வெளி ஆராய்ச்சி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 100 வருசத்துக்கு முன்னாடி மூழ்கிய கப்பலில் ‘தங்கப்புதையல்’.. இதோட மதிப்பு இத்தனை கோடியா..? மிரண்டு போன ஆய்வாளர்கள்..!

OUTSIDE EARTH, SPACE, சிறுகோள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்