'ஐரோப்பாவிலும்' பரவுது புதுவித காய்ச்சல்... 'ஃபிரான்சில்' மட்டும் 26 பேர் பலி... 'மறைக்கும்' உலக நாடுகள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐரோப்பிய நாடுகளிடையே புதுவித இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவி வரும் நிலையில், ஃபிரான்ஸில் மட்டும் இந்நோய் தொற்றினால் 26 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இது இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் இந்த காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் காய்ச்சலினால், ஃபிரான்சில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அவர்களில் 49 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியை ஒட்டி அமைந்துள்ள செக் குடியரசு நாட்டிலும் இந்த வைரஸ் நோயினால் 12 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய் தொற்றினால் பிரான்சில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் அனைத்து பெருநகரங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. மொத்தமாக இதுவரை 810 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சமயத்தில், இன்ஃப்ளுவென்சா தொற்றுநோய்  ஐரோப்பாவில் பரவி வருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

EUROPE, FRANCE, PARIS, INFLUENZA VIRUS, CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்