'கேரளாவில் குணமான வெளிநாட்டினர்'...ஏன் 'எச்.ஐ.வி' மருந்து கொடுக்கப்பட்டது?... பின்னணி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்தனர். அதில் ஒருவருக்கு எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக், அவரது மனைவி அன்னே வில்லியம், மற்றும் ஜேனட் லே, ஜேன் எலிசபெத் ஜாக்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் இருக்கும் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் 4 பேரும் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், கடந்த வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அதேபோன்று திருவனந்தபுரம் மற்றும் எர்ணகுளம் மருத்துவமனைகளில், இத்தாலிநாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனோசோ மற்றும் இங்கிலாந்து நாட்டவர்களான லான்சன் எலிசபெத் லான்ஸ் மற்றும் பிரையன் நீல் ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர். இதில் பிரையன் நீல் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கொச்சியில் இருக்கும் கலாமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர், எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது. இது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு பெரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெளிநாட்டவர்கள் குணமடைந்த போதும் அவர்கள் அனைவரும், கொச்சியில் உள்ள போல்கட்டி ஹோட்டலில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யார் வீட்ல தங்குறது?’.. ஊரடங்கால் 2 கல்யாணம் செய்தவருக்கு வந்த ‘சோதனை’.. சண்ட போட்ட ‘மனைவிகள்’.. கணவர் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- ஊரடங்கை தளர்த்துவது 'இதற்குத்தான்' வழிவகுக்கும்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த 'உலக' சுகாதார அமைப்பு!
- 'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!
- கொரோனாவால் 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்'... அவர்களின் குடும்பத்தினர் 'கண்டிப்பா' இதை பாலோ பண்ணனும்!
- உலகளவில் 'இதுவரை' கொரோனாவால்... 'உயிரிழப்பை' சந்திக்காத நாடுகள் இதுதான்!
- ஊரடங்கு நேரத்தில் 'கள்ளக்காதலியை' பார்க்க... 200 கிலோமீட்டர் 'பயணித்த' முதியவர்... ஹைலைட்டே காரில் ஒட்டியிருந்த 'ஸ்டிக்கர்' தான்!
- ‘கொரோனாவை சிறப்பாக கையாளும் 6 நாடுகள்’... ‘ஆட்சி செய்யும் இவங்க எல்லோருக்குமே’... ‘ஒற்றுப்போகும் ஒரு விஷயம்’... ‘பாராட்டும் நெட்டிசன்கள்’!
- யாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்?... வெளியான 'புதிய' தகவல்!
- கொரோனாவுக்கு எதிரான 'போரில்' வென்று விட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த பிரதமர்... 'கட்டுக்குள்' கொண்டு வந்தது எப்படி?
- ‘ஆசையாக குளிக்கச் சென்ற சிறுமிகள்’... 'தாமரைக் கொடியில் சிக்கி நேர்ந்த துக்கம்'... 'கதறித் துடித்த குடும்பம்'!