'முறையான பரிசோதனை இல்லை’... ‘மே, ஜூன் மாதங்களில்’... ‘உச்சத்தை தொடும் கொரோனா தொற்று’... ‘எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் மே-ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொடும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய அரசு கொரோனா வைரஸ் தொடர்பாக அலட்சியமாக இருந்து வருவதாகவும், மிகக் குறைந்த அளவிலே இதுவரை பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பதாகவும் இதன் விளைவாக அடுத்த இரு மாதங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ நிபுணரும் இந்தோனேசியா அரசின் கொரோனா பணிக்குழுவின் ஆலோசகருமான விக்கு அடிசாஸ்மிட்டோ கூறுகையில், “இந்தோனேசியாவில் மே மாதத்தில் கொரோனா தொற்று மிகத் தீவிரம் எடுக்கும். ஜூன் மாதம் வரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும். இந்தக் காலகட்டத்தில் 95,000 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொரோனா பாதிப்பு சாத்தியம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தோனேசிய அரசு விரைந்து செயலில் இறங்காவிட்டால், மே மாத முடிவில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும். 1,40,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் இந்தோனேசியப் பல்கலைகழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
போதிய அளவில் கொரோனா பரிசோதனைகளுக்கான கருவிகளை இந்தோனேசியா கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை தொடர்பாக இந்தோனேசிய அரசின் செயல்பாடைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தோனேசியாவில் இதுவரை 5,516 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 548 பேர் குணமடைந்துள்ள நிலையில் 496 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 1. டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 2. யாரை டின்னருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என ரசிகர்களின் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அதிரடி பதில்!
- 'கொரோனா பாதிப்பு'... '4 வண்ணங்களாக பிரிக்கப்பட்ட சென்னை'... 'அதிகம் பாதித்தவர்கள் இவர்கள்தான்'... 'சென்னை மாநகராட்சி வெளியீடு'!
- முந்தைய 21 நாள் ஊரடங்கினால்... கொரோனா 'தொற்று' குறைந்ததா?... 'புள்ளி விவரம்' என்ன சொல்கிறது?
- ‘பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா உறுதி!’.. ‘ஆர்டர் செய்த 72 குடும்பங்களின் தற்போதைய நிலை இதுதான்!’
- 'உண்மையான' பாதிப்பு '7 லட்சத்திற்கும்' மேல்... உலகிலேயே 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடாக 'மாற' வாய்ப்பு... 'அதிர்ச்சி' கொடுக்கும் அறிக்கை...
- 'நாங்க ஒரு பக்கம் கஷ்டப்படுறோம்'... 'மறுபக்கம் சைலண்டா கொரோனாவை பரப்பிய கும்பல்'... சேலத்தில் அதிரடி கைது!
- ‘உண்மையா கொரோனா வைரஸ்’... ‘எங்கிருந்து வந்ததுச்சுனு சொல்லுங்க’... ‘அப்பத்தான் எல்லோருக்கும் நல்லது’... ‘சீனாவிடம் ஆதாரம் கேட்கும் நாடு’!
- 'வுஹான்' ஆய்வகத்தில் தான்... 'உண்மையிலேயே' கொரோனா 'உருவானதா?'... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...
- 'தொடரும் ஊரடங்கு'... 'கல்லூரித் தேர்வுகள் எப்போது நடக்கும்'?... உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
- உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!