"வயித்துல என்னமோ அசையுது... சீக்கிரமா டாக்டர கூப்பிடுங்க!" - கர்ப்பமான ஒரு மணி நேரத்தில்... இளம்பெண்'ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. வியப்பூட்டும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி நூரேனி (வயது 28) இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இவர் தான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன. இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம். பின்னர், குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனைமகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர், கர்ப்பமாக இருக்கும் 25,000 வழக்குகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம். இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம்.
எனினும், ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். இது ஒரு ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம். தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஃபேக்டரியில வேலை வாங்கித் தர்றோம்.. வாங்க!”.. இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரர்கள்!.. அதன் பிறகு நடந்த கொடூர சம்பவம்!
- “புது காதலனுக்கு கிஃப்டா கொடுக்குற?”.. கர்ப்பமாக இருந்த முன்னாள் காதலியை 21 முறை குத்திய நபர்!.. வயிற்றில் இருந்த சிசுவுக்கு நேர்ந்த சோகம்!
- ”கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்து... சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி”.. பிச்சை எடுத்து வந்த 4 அடுக்குமாடி ஓனர் மாமியாருக்கு மருமகளால் நேர்ந்த கதி!
- “உள்ள இழுத்து, கதவ சாத்திட்டு அடிடானு சொன்னாங்க!”.. “என் சாவுக்கு காரணமானவங்கள!”.. தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய உருக்கமான வீடியோவால் பரபரப்பு!
- கொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்!.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!
- “அக்கா லைவ் வீடியோ கால் பேசிட்டே இருந்தா... திடீர்னு கட் ஆச்சு!”.. மறுமணம் செய்யவிருந்த இளம் பெண்.. நேரில் சென்ற தங்கை.. வீட்டில் கண்ட அதிர்ச்சி காட்சி!
- '300' கொழந்தைங்கள சீரழிச்சுருக்காரு... சில நேரம் அடிச்சு 'கொல' கூட பண்ணிடுவாரு... 'லேப்டாப்' ஆதாரங்களை கண்டு அதிர்ந்து போன 'போலீசார்' ... கொடூரன் ‘பரபரப்பு’ கைது!
- யாருக்குடா கொடுக்குறீங்க தடை...? 'கருத்தடை கருவியை கையில் ஏந்திக் கொண்டு பிறந்த குழந்தை...' பிறக்குறப்போதே ’தடையை’ தகர்த்தெறிந்த மாஸ்டர்...!
- “உல்லாசமா இருக்கும்போது, அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்து!”! .. நடுங்கவைக்கும் இண்டர்நெட் கஃபே சம்பவம்!
- VIDEO: 'புயல் வேகத்தில் வந்து, பெண்ணை அடித்து வீசி... உடல்மீது ஏறி இறங்கிய கார்!' - பதறவைக்கும் 'வைரல்' வீடியோ!