"இத யாருமே எதிர்பார்க்கல".. கால்பந்து போட்டிக்கு நடுவே அரங்கேறிய அசம்பாவிதம்.. நூறைத் தாண்டிய பலி எண்ணிக்கை!!
முகப்பு > செய்திகள் > உலகம்கால்பந்து போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் காரணமாக, சுமார் 129 பேர் வரை பலியான விஷயம், உலக அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதில், உள்ளூர் அணிகளான Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய அணிகளுக்கு இடையே நேற்றிரவு கால்பந்து போட்டி நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்களும் மைதானத்தில் கூடி இருந்தனர். இரு அணியின் ரசிகர்களும் போட்டியை மிகவும் உற்சாகத்துடன் தங்கள் அணிக்கு ஆதரவை அளித்து கண்டு களித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த போட்டியில், Persebaya Surabaya அணி வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், மைதானத்தில் இருந்த Arema FC ரசிகர்கள் ஆக்ரோஷம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அங்கிருந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் இறங்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், பதற்றம் அடைந்த அனைவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றதன் காரணமாக, அங்கே கூட்ட நெரிசலும் உருவாகி உள்ளது.
இதன் பெயரில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர், களத்தில் இறங்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த வன்முறையின் காரணமாக, சுமார் 150 பேருக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கால்பந்து போட்டிக்கு நடுவே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவத்தால், 129 பேர் வரை உயிரிழந்த சம்பவம், இந்தோனேசியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டு பண்ணி உள்ளது. மேலும், எஞ்சிய போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி பேசிய இந்தோனேசிய விளையாட்டுதுறை அமைச்சர் ஜைனுடின் அமலி, "இது நமது கால்பந்து விளையாட்டைக் காயப்படுத்தும் ஒரு வருந்தத்தக்க சம்பவம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. "ஓப்பன் பண்ண மனுஷன் வாழ்க்கை அடுத்த நிமிஷமே மாறிடுச்சு"..
தொடர்புடைய செய்திகள்
- 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்.. இரண்டே மாதத்தில் நடந்த பரபரப்பு 'ட்விஸ்ட்'.. வெளியான அதிர்ச்சி தகவல்
- "நைட் தூங்கப் போறப்போ என் கண்ணை கட்டிடுவாரு".. ஆன்லைனில் அரும்பிய காதலால் வந்த சோகம்.. 10 மாசத்துக்கு அப்பறம் மனைவிக்கு தெரியவந்த உண்மை..!
- முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?
- கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் கழுத்த பிடித்து செல்பி.. ரசிகரின் செயலால் அதிர்ந்த ஸ்டேடியம்... வைரல் வீடியோ..!
- 6 வருஷமா கழுத்தில் சிக்கிய டயருடன் போராடிய முதலை.. மீட்பவருக்கு சன்மானம் அறிவிப்பு..
- 'வானத்து நிலவு சின்னதடி'.. காதலியுடன் ரொனால்டோ துபாயில் ரொமான்ஸ்.. மிரள வைத்த ஒரு நாள் செலவு
- அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
- கருவிலேயே கலையாதவன்… 3,500 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரன்!- உலகையே வென்ற அதிசய மனிதன்!
- 'சோறு' பொங்குறதுல என் 'பொண்டாட்டிய' அடிச்சுக்க ஆளே இல்ல...! யோவ், 'அடுப்பு' பக்கம் இருக்குறப்போ கிட்ட போயிடாதயா...! - என்னடா 'இப்படி' கெளம்பிட்டீங்க...?
- 'சாதாரண வீக்கம் தானேன்னு கேஷுவலா இருந்த இளைஞர்'... 'பரிசோதனைக்கு போன இடத்தில்'... கொப்பளம் மூலம் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!