'எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது'... 'நடக்கப்போகும் கோரம் தெரியாமல் Farewell பாடலை பாடிய வீரர்கள்'... நெஞ்சை நொறுக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது தான் மனித வாழ்க்கை. ஆனால் எதிர்பாராத துயரம் வாழ்க்கையில் நடந்தால் அது மொத்த வாழ்க்கையையும் நொறுக்கிவிடும்.

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. ஜெர்மனியில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 40 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இந்த கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது திடீரென கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர். இதனையடுத்து இந்தோனேசியக் கடற்படை, நீர்மூழ்கிக் கப்பல் மாயமானதாக அறிவித்துத் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது. இந்த சூழலில் 3 நாட்களாக இரவு பகலாக நடந்த மீட்புப் பணிகளுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை, மாயமான நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாகக் கருதப்படுகிற இடத்திலிருந்து, கப்பலின் பாகங்கள் சிலவற்றை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து மாயமான நீர்மூழ்கிக் கப்பல் மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கி விட்டதாக இந்தோனேசியக் கடற்படை அறிவித்தது. மேலும் கப்பலிலிருந்த மாலுமிகள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கடற்படை தெரிவித்தது. அதேசமயம் கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்த நிலையில் ‌கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் 3 துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கப்பலிலிருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக இந்தோனேசிய ராணுவம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்தோனேசிய ராணுவ நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் கப்பல் மூழ்குவதற்கு முன்பு கடைசியாகப் பிரியாவிடை பாடல் ஒன்றைப் பாடுவது தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது. கடற்படை வீரர் ஒருவர் தமது கிட்டாரில், இந்தோனேசியாவில் பிரபலமான பிரியாவிடை பாடல் ஒன்றை வாசிக்க, எஞ்சிய வீரர்கள் அந்த நபரை சூழ்ந்து கொண்டு, குறித்த பாடலை இணைந்து பாடுகின்றனர். 

அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில நாட்களில், அந்த நீர்மூழ்கிக் கப்பலானது மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கி, மொத்த வீரர்களையும் காவு வாங்கியது. கப்பலின் சில பாகங்கள் மீட்புக் குழுவினரால் தற்போது மீட்கப்பட்டுவரும் நிலையில், அந்த வீடியோ பதிவும் சிக்கியுள்ளது. இதனிடையே நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் பலியான மாலுமிகள் அனைவரும் இந்தோனேசியாவின் சிறந்த தேசபக்தர்கள் என்று அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ புகழாரம் சூட்டினார்.

மற்ற செய்திகள்