'17 வயது இளம் பெண்ணுடன்... 78 வயது முதியவர் திருமணம்!'.. சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு இருந்தப்ப... பேரிடியாக வந்த 'செய்தி'!.. 22 நாட்களில் விவாகரத்து!.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். திருமணம் ஆன சில மாதங்களிலே உண்மை புரிந்துவிடும் என்பது வேறு கதை. சமீபத்தில் இந்தோனியாஷியாவில் நடந்த திருமணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வதை இப்போது யாரும் பெரிதுபடுத்துவதில்லை.

ஆனால், இந்தோனேஷியாவில் 17 வயதுப் பெண்ணை 78 வயது முதியவருக்குப் பெண்ணின் பெற்றோர்களே மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துவைத்தார்கள் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியது.

ஆனால் அவர்கள் சந்தோஷம் நீடிக்கவில்லை. காரணம், திருமணமாகி 22 நாட்களில் தன் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த 78 வயது நபர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அபா சர்னா (78 வயது), நோனி நவிதா (17 வயது) இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அவருக்கு சீதனமாக இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், கட்டில், மெத்தை ஆகியவைக் கொடுக்கப்பட்டது.

ஆனால், திருமணமாகி 22 நாட்களே ஆன நிலையில், சர்னா தன் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், இதை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது நோனியின் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி நோனியின் சகோதரி ஐயான் கூறுகையில், "இந்த செய்தியைக் கேட்டவுடன் நாங்கள் அதிர்ந்துபோனோம். ஏனெனில், இரண்டு பேருக்கும் இடையில் எந்த சண்டை சச்சரவும் இல்லை. எங்கள் குடும்பத்தினரும் அவரிடன் நன்றாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் சர்னாவும், அவர் குடும்பத்தினரும் குற்றம் கண்டுபிடிக்க வழித் தேடுகிறார்கள். நோனி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதை ஏற்கமுடியாது" என்று மறுத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்