"இது என்னோட லாஸ்ட் ட்ரிப்".. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த விமான பணிப்பெண்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இண்டிகோ விமானத்தில் பயணத்தின் நடுவே பணிப்பெண் ஒருவர் பேசிய வீடியோ பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பானை செய்ய கத்துக்கும் குட்டிப்பூனை.. வைரலான வேற லெவல் கியூட் வீடியோ..!

கடைசி நாள்

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான இண்டிகோவில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருபவர் சுரபி நாயர். இவர் தன்னுடைய பணியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். இதனை, விமான பயணத்தின் நடுவே அவர் அங்கிருந்த தொலைபேசி மூலமாக தெரிவித்தது பயணிகள் மற்றும் சக ஊழியர்களை கண்கலங்க வைத்திருக்கிறது.

தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக நன்றி தெரிவிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டு சுரபி பேசியதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நான் போக வேண்டும்

விமான பயணத்தின் நடுவே பேசிய சுரபி,"இப்படி ஒரு நாள் வரும் என்று நான் நினைக்கவே இல்லை. இது என் இதயத்தின் ஒரு பகுதி போன்றது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த நிறுவனம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. வேலை செய்ய ஒரு அற்புதமான நிறுவனம். இது ஒரு அருமையான அனுபவம். நான் போக விரும்பவில்லை ஆனால் நான் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என நா தழுதழுக்க பேசினார்.

மேலும், நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் சுரபி கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவை அமெரிக்காவை சேர்ந்த பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியான அம்ருதா சுரேஷ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ இதுவரையில் 3.2 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

நன்றி

இண்டிகோ விமான நிறுவனத்தில் இருந்து விலகுவதாக சுரபி பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பலரும் சுரபியின் கனிவான குணத்தையும் உழைக்கும் விதம் குறித்தும் பாராட்டியதோடு அவரது எதிர்காலம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

தன்னுடைய கடைசி வேலை நாள் குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | நகைக்கடை சுவரில் இருந்த ஓட்டை.. உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த திருடர்கள்..தூத்துக்குடியில் பரபரப்பு..!

 

INDIGO, AIR HOSTESS, INDIGO AIR HOSTESS, FAREWELL SPEECH, விமான பணிப்பெண், இண்டிகோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்