"சூப்பர்ல".. சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்காக.. விசா விஷயத்தில் புது விலக்கு!!.. செம ஹேப்பியில் மக்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா செல்லும் மக்கள் விசா விண்ணப்பிக்கும் சமயத்தில் புதிய விலக்கு ஒன்றை சவுதி அரேபியா நாடு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மாரடைப்பால் இறந்த அப்பா?".. 3 மாசம் கழிச்சு தாய் போனில் எதேச்சையாக மகள் கேட்ட ஆடியோ!!.. திடுக்கிடும் சம்பவம்.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாட்டு அரசும் பல சந்திப்புகள் மூலம் நாடுகளை மேம்படுத்துவதற்காக முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்காக விசா விண்ணப்பிப்பதில் புதிய விலக்கு ஒன்று தொடர்பாக அறிக்கை ஒன்று சவுதி அரேபியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக , டெல்லியில் உள்ள சவுதி அரேபியா தூதரகம் செய்தி குறிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், "இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே பல்லாண்டுகளாக நல்லுறவு தொடருகிறது. இதனால், சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் இனி தேவை இல்லை என்கிற சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்து வருவதுடன் நாட்டின் மேம்பாட்டுக்கும் பங்களித்து வருகின்றனர். இரு நாடுகளின் நல்லுறவை இன்னும் மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்காக அந்நாட்டு அறிவித்துள்ள விசா சலுகை பெரிய அளவில் பலருக்கும் பலனாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சவூதி அரேபியாவின் இந்த சிறப்பு அறிவிப்புக்கு இந்திய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. சவுதி அரேபியா நாட்டிற்கு ஆண்டு தோறும் ஏராளாமான இந்தியர்கள் தொடர்ந்து சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "நீங்க நிஜமா அப்டி நெனச்சீங்களா?".. அஸ்வின் விஷயத்தில் பரவிய வதந்தி??.. ராஜஸ்தான் அணியின் தரமான பதிலடி!!

INDIANS, POLICE, SAUDI ARABIA, SAUDI ARABIA VISA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்