BREAKING: 'திடீரென 150 இந்தியர்களை 'அள்ளிச்சென்ற' தாலிபான்கள்'... 'காபூல் ஏர்போர்ட் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு'... 'கடத்தப்பட்டார்களா?' அதிர்ச்சியில் உலக நாடுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 150க்கும் அதிகமான இந்தியர்களைப் பிடித்து வைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING: 'திடீரென 150 இந்தியர்களை 'அள்ளிச்சென்ற' தாலிபான்கள்'... 'காபூல் ஏர்போர்ட் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு'... 'கடத்தப்பட்டார்களா?' அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.  தலைநகரம் காபூலைக்  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் நாட்டின் முழு கட்டுப்பாடும் தாலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.

Indians are not abducted,They took to police station, questioned

தாலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ,  என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான விமானநிலையத்தில் குவிந்து உள்ளார்கள். இந்நிலையில் காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாகவும், அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூல் ஹமீது ஹர்சாய் விமானநிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ள நிலையில், 150க்கும் இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை தாலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தாலிபான்கள் வெளியிட்டுள்ள தகவலில், ''இந்தியர்களைக் கடத்தவில்லை என்றும் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து மீண்டும் விமானநிலையத்தில் கொண்டு சென்று விட்டதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்