கடும் பனி.. 20 கி.மீ நடந்தே போனோம்.. அங்க போன அப்பறம்தான் அந்த விஷயமே தெரிஞ்சது.. உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் இந்திய மாணவர்கள் கடும் குளிரால் சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல் இந்திய மாணவர்களும் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக இந்திய மாணவர்கள் போலந்து, ருமேனியா, அங்கேரி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுள்ளனர். தற்போது அங்கு கடும் குளிர் வாட்டி வருகிறது. உக்ரைன் எல்லைக்கு சென்ற இந்திய மாணவர்கள் 20 மணிநேரம் கடும் குளிரில் தவித்ததாக தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் போலந்து நாட்டுக்குள் செல்வதற்காக உக்ரைனில் உள்ள ஷெஹினி-மெடிக்கா எல்லைக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் எல்லையில் உள்ள சோதனை முகாம்களுக்கு செல்ல கடும் சிரமங்களை சந்தித்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து கூறிய மாணவர்கள், ‘நாங்கள் 25-ம் தேதி காலை எல்லையை அடைந்தோம். ஆனால் எல்லையில் உள்ள சோதனை முகாம்களுக்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். எங்களிடம் வாகன வசதி ஏதும் கிடைக்கவில்லை.

லீவில் நகரில் இருந்து ஷெஹினி பகுதி 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதலில் அங்கு செல்ல வாகனங்களில் புறப்பட்டோம். பின்னர் 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று அப்பகுதியை அடைந்தோம். அங்குள்ள தங்கும் இடங்களுக்கு சென்றபோது பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறினர். மற்ற தங்கும் இடங்கள் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இதனால் நாங்கள் வெளியே கடும் குளிரில் தவித்தபடியே இருந்தோம்’ என உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தைன்னு சொல்லிட்டு.. சைலண்டா ரஷ்யா செய்யும் வேலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய செயற்கைக்கோள் போட்டோ..!

INDIAN STUDENTS STUCK, UKRAINE BORDER, FREEZING COLD, இந்திய மாணவர்கள், உக்ரைன், ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்