"நம்பிக்கை எல்லாம் போய்டுச்சு..என்ன நடக்குதுன்னே தெர்ல"..உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்த இந்திய மாணவி.. வைரல் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செய்து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertising
>
Advertising

IPL 2022 : பல கஷ்டம் தாண்டி சாதித்த இந்திய வீரருக்கு.. பஞ்சாப் கிங்ஸ் அணி கொடுத்த கேப்டன் பொறுப்பு..

ரஷ்யா - உக்ரைன் போர்

கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உக்ரைனின் விமான நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானங்களை ரஷ்யா தகர்த்து வருகிறது. நேற்று உக்ரைனின் எரிபொருள் நிறுவனம் ஒன்றினை தாக்கியது ரஷ்யா. கார்கிவ் நகரத்தில் சண்டை தீவிரமடைந்துள்ளது. நேற்று வரையில் சுமார் 198 உக்ரேனியர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகத்திற்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது மத்திய அரசு.

இந்திய மாணவர்கள்

உக்ரைன் நாட்டில் சுமார் 1.6 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்த மாணவர்களில் பலர் மெட்ரோ ஸ்டேஷன்கள், பாழடைந்த பேஸ்மெண்ட் என பல இடங்களில் பதுங்கி உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கி உள்ள உத்திர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த மாணவி கரிமா மிஸ்ரா டிவிட்டர் வாயிலாக உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். படபடப்புடன் பேசும் அவர், எப்படியாவது தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கேட்பது காண்போர் இதயங்களை கலங்க வைக்கிறது.

இதுகுறித்து கரிமா பேசுகையில்,"நாங்கள் எல்லா கண்களிலிருந்தும் சூழப்பட்டிருக்கிறோம் ... யாரும் உதவவில்லை, எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில், மக்கள் வருகிறார்கள், அவர்கள் குழப்பத்தை உருவாக்கி உள்ளே வர முயற்சி செய்கிறார்கள், என்ன நடக்கிறது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" எனக் கவலையுடன் தெரிவித்தார்.

மேலும் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு பேசிய கரிமா,"உக்ரைன் எல்லைக்கு பேருந்தில் சென்ற எங்கள் நண்பர்கள் சிலரை ரஷ்ய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மாணவிகளை தூக்கிச் சென்றதாக எங்களிடம் கூறப்பட்டது. மாணவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தோம்... ஆனால் இப்போது அப்படித் தோன்றவில்லை... தயவு செய்து யாரையாவது விமானத்தில் அனுப்பி உதவி செய்யுங்கள். இந்திய ராணுவத்தை அனுப்புங்கள் இல்லையேல் இங்கிருந்து போக முடியாது என நினைக்கிறோம்...இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை" எனச் சொல்லும்போது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவியான கரிமா வீடியோவின் இறுதியில் கூப்பிய கைகளோடு,"தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! இந்த வீடியோவை யார் பார்த்தாலும் பகிரவும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, பிரியங்கா காந்தி உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க அரசு விரைந்த செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நடவடிக்கை

இன்று காலை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கிய மந்திரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவுக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிக்கு ஹர்தீப் பூரி -யும் போலந்திற்கு விகே சிங் அவர்களும் பயணிக்க இருக்கிறார்கள்.

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து ஏர் இந்தியா மூலமாக அவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது.

 

Russia – Ukraine Crisis: இந்தியர்களை காப்பாத்தியே ஆகணும்.. 4 அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த புது அசைன்மென்ட்..!

 

RUSSIA UKRAINE WAR, INDIAN STUDENT, INDIAN STUDENT FROM UKRAINE, RUSSIA UKRAINE CRISIS, இந்திய மாணவி, ரஷ்யா - உக்ரைன் போர், இந்திய மாணவர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்