"ஊரடங்கு நேரத்திலா இப்படி அநியாயம் பண்ணுவீங்க?".. 'அமெரிக்காவில்' கொந்தளித்த 'வாடிக்கையாளர்கள்'!.. 'இந்தியர்' மீது பாய்ந்த 'வழக்கு'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிளசண்டன் என்கிற இடத்தில் அப்னா பஜார் என்கிற பெயரில் பிரபல மளிகைக் கடையை நடத்தி வந்த இந்தியர் ஒருவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அநியாய விலைக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ராஜ்விந்தர் சிங் என்னும் இந்த நபர் ஊரடங்கினைப் பயன்படுத்தி பொருட்களுக்கான விலையை 200 சதவீதம் உயர்த்தியுள்ளார். இதுதொடர்பாக அங்கு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது ரசீதுடன் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல உணவுப் பொருட்கள் நெருக்கடி காலத்தில் அனுமதிக்கப்பட்ட 10 சதவீத விலை அதிகரிப்பையும், தாண்டி 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்குள்ள அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் ராஜ்விந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டதோடு, அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆயிரம் டாலர் வரை அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'!..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'!
- 'கொரோனா முடக்கத்துக்கு பின்.. அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் முதல் விமானம்'.. தாயகம் திரும்பும் நெகிழ்ச்சியில் 'சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கூடிய பயணிகள்!'
- "இதுக்கு நீங்கள்தான் தகுதியானவர்கள்!".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்!
- '127 பேரிடம்' நடத்தப்பட்ட 'சோதனையில் வெற்றி...' 'ஆரம்ப கட்ட' நோயாளிகளை 'குணப்படுத்தி விடலாம்...' 'ஹாங்காங் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை...'
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...
- கொரோனா 'ஊரடங்கால்' பரவும் 'மற்றொரு' அபாயம்... 5 ஆண்டுகளில் 'உயிரிழப்பு' மட்டும்... வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...
- 'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'
- "சீனாதான் வைரசை பரப்பியது..." 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'
- விருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...