அமெரிக்காவில் இந்திய ஆராய்ச்சியாளர் நடுரோட்டில் படுகொலை!.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!.. நொறுங்கிப் போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள் ப்ளானோ என்ற இடத்தில் வசித்து வந்தவர், சர்மிஸ்தா சென் (வயது 43). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் Molecular biology முடித்துவிட்டு டெக்சாஸில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, அவர் ஜாகிங் சென்ற போது அடையாளம் தெரியாத நபரால் கடுமையாக தாக்கப்பட்டு வழியிலேயே கொல்லப்பட்டார். அவரது சடலத்தை அந்த வழியாகச் சென்றவர் கண்டறியவே, போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறை, சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயதான பகரி அபியோனா மன்க்ரீஃப் என்பவரை கைது செய்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கொலை நடந்த அதே சமயத்தில் தான் கைது செய்யப்பட்ட பகரி, அதிரடியாக அருகிலிருந்த வீட்டை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அரங்கேறியுள்ளதால், போலீசார் இடையே பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்