‘ஸ்நேகம் நிறஞ்ச ஆஷம்சகள்.. எல்லாவர்க்கும் நன்னி அறியிக்குன்னு!’.. நியூஸிலாந்து அமைச்சரவையில் கலக்கிய இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்! வைரல் ஆகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நியூஸிலாந்தில் ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது முறை ஜெசிந்தா பிரதமராக பதவியேற்றார். இவருடைய கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா பிரபலமான அமைச்சர். 

இந்த நிலையில், அதே கட்சியின் சார்பாக போட்டியிட்டு அமைச்சராக தோந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா அந்நாட்டு அமைச்சரவையில் இடம் பெற்றதை அடுத்து, 2017ல் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்த அவர், தனது தாயமொழியான மலையாளத்தில் பேசிய வீடியோவை மத்திய அமைச்சர் ஹாதீப்சிய பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.  

அதில்,  “எல்லா சுகுர்துக்கள்க்கும் எண்டே ஸ்நேகம் நிறஞ்ச ஆஷம்சகள். எல்லாவர்க்கும் எண்டே நன்னி அறியிக்குன்னு” என்று மலையாளத்தில் பிரியங்கா  பேசியுள்ளார்.

இதற்கு, “அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அர்த்தம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்