'பணம் வெச்சிருந்தா.? .. இப்படி பண்றது சரியா?'.. இந்திய குடும்பத்தினர் செய்த காரியம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர், அங்குள்ள நட்சத்திர ரிசார்ட்டில் தங்கியிருந்துள்ளனர். ஆனால் அவர்கள் செக்-அவுட் செய்துவிட்டு கிளம்பும்போது அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்ததில் பல பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

உடனே அந்த குடும்பத்தினர் கார் ஏறிச் செல்வதற்கு முன்னாள், ஒருவர் ஓடிவந்து அவர்களை நிப்பாட்டி, அவர்களின் பைகளை சோதனை செய்கிறார். அப்போது அந்த குடும்பத்தினர், அங்குள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் விவாதம் செய்துகொண்டிருக்கிறார். ஆனாலும் அந்த ஹோட்டல் ஊழியர்கள் சோதனை செய்வதை நிறுத்துவதாயில்லை.

ஒரு கட்டத்தில் அவர்களின் சூட்கேஸில் இருந்து டவல், மின்னணு சாதங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை அந்த ஹோட்டல் ஊழியர்கள் கண்டெடுக்கின்றனர். உடனே அந்த குடும்பத்தினர், ‘மன்னிக்கவும், இது எங்கள் குடும்பச்சுற்றுலா. நாங்கள் வேண்டுமானால் பணம் தருகிறேன். எங்களை விடுங்கள். எங்களுக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு’ என்கின்றனர்.

ஆனால் அதற்குள் அந்த குடும்பத்தினரின் திருட்டு அம்பலமானதை அடுத்து, அந்த குடும்பத்தில் ஒருவர் ,‘நாங்கள் பணம் தருகிறோம்’ என்று சொல்கிறார். அதற்கு அந்த ஹோட்டல் ஊழியர், ‘உங்களிடம் பணம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் இது செய்யத்தக்க செயல் அல்ல’ என்கிறார்.

இதனை வீடியோ எடுத்த நபர், வெளிநாட்டில் சென்று இந்திய பாஸ்போர்ட் எனும் மிகப்பெரிய அங்கீகாரத்துடன் சென்று இப்படி நமக்கு அவப்பெயர் உண்டாக்கும், இவர்களின் பாஸ்போர்ட்களை ரத்து செய்யவேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

INDONESIA, VIDEOVIRAL, TOUR, INDIA, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்