மகள் பிறந்த நேரம்.. அபுதாபி லாட்டரி டிக்கெட் வாங்கிய இந்தியர்.. ஓவர் நைட்டில் அடித்த ஜாக்பாட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய அரபு நாட்டில் லாட்டரி டிக்கெட்கள் அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. அபுதாபி பிக் டிக்கெட், எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா போன்ற வாராந்திர டிராவில் ஏராளமான மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அபுதாபி பிக் டிக்கெட் குலுக்கலில் கத்தாரில் வசித்துவரும் இந்தியர் ஒருவருக்கு 5,00,000 திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 1,02,46,187 ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா Vs இலங்கை கிரிக்கெட்.. கால அட்டவணையை மாற்றிய BCCI..!

அபுதாபி பிக் டிக்கெட்

அபுதாபியில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல், பிக் டிக்கெட் நடைபெற்று வருகிறது. ரொக்கப் பரிசு ஒருபக்கம், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசுக் கார்கள் ஒருபக்கம் என பரிசுகளை வாரி வழங்கும் இந்த பிக் டிக்கெட்டில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் கலந்துகொள்ளலாம் என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து இந்த லாட்டரியை மக்கள் வாங்கிவருகின்றனர்.

இதில், பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தான் என்கிறது தரவுகள். அதுவும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துவரும் இந்தியர்கள் மத்தியில் இந்த பிக் டிக்கட்டிற்கு பெரிய வரவேற்பு இருந்துவருகிறது.

இந்நிலையில், கடைசியாக நடைபெற்ற குலுக்கலில் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்துவரும் கோலன்தாஸ் அகமது ஷவுகத் என்பவருக்கு தான் இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

அதிர்ஷ்ட மாதம்

இந்த வெற்றி குறித்துப் பேசிய ஷவுகத்," என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிப்ரவரியில் தான் பிறந்தன. அதனாலேயே நான் இந்த மாதத்தினை அதிர்ஷ்டமானதாக கருதுகிறேன். நான் கடந்த ஒரு வருடமாக பிக் டிக்கெட் வாங்கிவருகிறேன். ஒவ்வொருமுறை அதன் முடிவுகள் வெளிவரும்போது அதனை ஆர்வத்துடன் பார்ப்பேன். இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. வெல்லும் வரையில் முயற்சியை கைவிடக் ககூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்" என்கிறார்.

114308 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை ஷவுகத் வாங்கியிருக்கிறார். இந்தப் பரிசுத் தொகை மட்டுமல்லாது மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட குலுக்களுக்கும் இந்த வெற்றி மூலம் ஷவுகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

வாரந்தோறும் நடைபெறும் இந்த டிராவில் கடந்த வாரமும் கத்தாரில் வசித்துவரும் இந்தியாவைச் சேர்ந்த அனாஸ் மேலேத்திலக்கல் என்பவருக்கு ஜாக்பாட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்

INDIAN BIG TICKET, ABU DHABI, INDIAN EXPAT, QATAR, இந்தியர், அபுதாபி லாட்டரி டிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்