பாதியில் நின்ன படிப்பு.. உடனே இளைஞர் எடுத்த புது ரூட்.. "ஒரு வருஷத்துல இத்தன கோடி ரூபாய் வருவாயா?"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக சோசியல் மீடியாவில் வலம் வரும் பொழுது நம்மைச் சுற்றி நடப்பது குறித்து நிறைய தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | "குறுக்க இந்த கௌஷிக் வந்தா".. சீரியஸா பேட்டி கொடுத்த ரோஹித்... தூரத்துல நம்ம அஸ்வின் பண்ணது தான் ஹைலைட்..😍 வைரல் வீடியோ

அதிலும் குறிப்பாக பலரின் இன்ஸ்பிரேஷன் கதைகளும், சில நேரத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத நேரத்தில் ஒருவரது வாழ்க்கை மாறுவது பற்றிய செய்திகளும் கடந்து வந்திருப்போம். அவற்றை நாம் நினைக்கும் போது ஒரு உத்வேகம் கூட நமக்கு பிறக்கும்.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் செய்து வரும் விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மெய்சிலிர்க்க வைத்து வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் Sanjith Konda House. இவர் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் BBA படித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், தனது வெளிநாட்டு பட்டப் படிப்பை இளைஞர் சஞ்சித் கொண்டா பாதியிலேயே கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

படிப்பை பாதியிலேயே கைவிட்ட சஞ்சித் கொண்டா மிகவும் வித்தியாசமான ரூட் ஒன்றை கையில் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் 'Dropout Chaiwala' என்ற பெயரில் டீக்கடை ஒன்றை தொடங்கி உள்ளார் சஞ்சித். அது மட்டுமில்லாமல், டீக்கடை தொடங்கிய ஒரு வருடத்தில் சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாயையும் அந்த இளைஞர் ஈட்டி உள்ளார்.

மெல்போர்ன் பகுதி காபிக்கு அதிகம் பெயர் போன இடம் என்பதால் துணிச்சலான முடிவையும் சஞ்சித் எடுத்திருந்தார். சிறு வயதில் இருந்தே தேநீர் மீது அதிக ஆர்வம் சஞ்சித்திற்கு இருந்து வந்துள்ளது. இந்த எண்ணத்தை உருவாக்கி தான் 'Dropout Chaiwala' என்ற பெயரில் காபி ஷாப் ஒன்றை மெல்போர்ன் பகுதியில் அவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

டீ, சமோசா உள்ளிட்ட பல பொருட்கள் அங்கே விற்கப்படும் நிலையில், அப்பகுதியில் உள்ள இந்தியர்கள் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியர்கள் கூட அதிகம் சஞ்சித் கொண்டா கடையில் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் சஞ்சித்தின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஒரே ஆண்டில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதால் மகனை நினைத்து அவர்கள் பெருமையும் அடைந்துள்ளனர்.

இங்கே இந்திய மாணவர்கள் பார்ட் டைமாக பணிபுரிந்து வரும் நிலையில், தன்னை முன்னுதாரணமாக வைத்து யாரும் படிப்பை கைவிட்டு விட கூடாது என்றும் சஞ்சித் அறிவுறுத்துகிறார். படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, ஒரே ஆண்டில் 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ள இளைஞர் குறித்த செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | T20 World cup 2022 : "இந்தியா Finals போய்டும் போலயே".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு umpire தான் காரணம்.!

UNIVERSITY, DROPS OUT, SELLS, TEA, AUSTRALIA, INDIAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்