ஃபர்ஸ்ட் எங்களுக்கு 'கஷ்டமா' தான் இருந்துச்சு...! 'இப்போ இந்த இடத்த பாக்குறப்போ...' 'ரொம்ப ஹேப்பியா இருக்கு...' - பாலைவனத்தில் தம்பதி செய்து வரும் காரியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவை சேர்ந்த அத்வைதா சர்மா மற்றும் பிராசி தம்பதிகள் வேலை பணியிடம் மாற்றம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளனர்.

அங்கு, அவர்கள் தங்கியிருந்த வீட்டில், வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை தாங்களே வளர்க்க திட்டமிட்டு, சிறு, சிறு செடி, கொடிகளை வைத்து அதன் மூலம் தக்காளி, சோளம் உள்ளிட்டவற்றை பெற்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரவலாக பரவி தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது.

இது குறித்து அத்வைதா சர்மா கூறும் போது, 'பிராசி கர்ப்பிணியாக இருந்த சூழலில் ரசாயன கலப்பில்லாத ஊட்டச்சத்துள்ள காய்கறி, பழங்களை தான் உண்ணவேண்டும் என நினைத்தோம். அதற்காகவே நாங்கள் குடியிருந்த வீட்டில் செடி, கொடிகளை வளர்க்க ஆரம்பித்தோம்.

இந்த செடிகளுக்கு தேவையான இயற்கை உரங்களுக்கு வீட்டிலிருந்து கிடைக்கும் உணவுக் கழிவுகளை பயன்படுத்தினோம். நாளடைவில் எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

அதன்பின் தான் மாடியில் இருந்த வீட்டு தோட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது.இப்போது நாங்கள் வசித்து வரும் கலீபா நகர பகுதியில் உள்ள பாலைவன இடத்தில் மிளகாய், தக்காளி, வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு, மாம்பழம், கத்தரிக்காய், பப்பாளி உள்ளிட்ட 30 வகையான காய்கறி மற்றும் பழங்கள் கொண்ட 500 செடி, கொடிகளை 24 சதுர மீட்டர் பரப்பளவில் வளர்த்து வருகிறோம்.

இந்த செடி, கொடிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இவற்றை வளர்க்க இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டது.

முதலில் இந்த செடி கொடி வளர்ப்பு சிரமமாக இருந்தாலும், நாளடைவில் இது எங்களுக்கு போதிய அனுபவத்தை கொடுத்தது. இதனால் நாங்கள் வசிக்கும் பகுதியானது பச்சைப் பசேலென காட்சி அளிக்கிறது.

எங்களை பார்க்கும் எங்களின் அக்கம்பக்கத்தினரும், எங்களிடம் இந்த மரம் செடி, கொடி வளர்ப்பது குறித்து கேட்டு அவர்களும் இதுபோன்ற தோட்டத்தை ஏற்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்துகிறது' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்