துபாயில் ஹோட்டல் வேலை.. இந்தியருக்கு அடிச்ச ஜாக்பாட்.. கோடி ரூபா கெடச்சதும் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருவரது வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த மாற்றம் நிகழும் என்பதை கணிக்கவே முடியாது. ஒருவர் நினைத்து கூட பார்க்காத நேரத்தில் நிச்சயம் ஏதாவது அசத்தலான சம்பவங்கள் அரங்கேறி அப்படியே வாழ்க்கையை புரட்டி போடும்.

Advertising
>
Advertising

Also Read | சும்மா சுர்ருன்னு.. உலகத்தின் காரமான மிளகாய்.. அசால்ட் காட்டிய நபர்.. மிரண்டு போன கின்னஸ் அதிகாரிகள்..!

அந்த வகையில், இந்தியர் ஒருவருக்கு துபாயில் அடித்துள்ள அதிர்ஷ்டம் தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய நாட்டை சேர்ந்தவர் சஜேஷ் NS. இவர் துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு முன்பாக ஓமனில் பணிபுரிந்து வந்த சஜேஷ், அதற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்படி ஒரு சூழலில் கடந்த நான்கு ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கத்தையும் கொண்டு வந்துள்ளார் சஜேஷ். இந்த நிலையில், சமீபத்தில் சஜேஷ் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 25 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ₹ 55 கோடி) பரிசு விழுந்துள்ளது.

தான் பணிபுரியும் உணவகத்தில் சக ஊழியர்கள் 20 பேருடன் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை சஜேஷ் வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையையும் அவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்கின்றனர். இது தொடர்பாக பேசும் சிஜேஷ், தனது உணவகத்தில் 150 ஊழியர்கள் வரை பணிபுரிவதாவும், தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு அதில் பலருக்கும் உதவி செய்யவும் முடிவு எடுத்துள்ளதாக சிஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது லாட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறினாலும் தொடர்ந்து லாட்டரி வாங்குவேன் என்றும் இதன் மூலம் தனது வாழ்வும் திசை திரும்பாது என்றும் சிஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அவரு கூட தான்".. இந்திய இளைஞரை கரம்பிடித்த பிரிட்டன் பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

DUBAI, WORKS, LOTTERY, CO WORKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்