துபாயில் இருந்து வந்த பயணிக்கு பாசிட்டிவ்.. இந்தியாவில் 2 ஆக உயர்ந்த குரங்கு அம்மை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்று துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "எபோலா மாதிரியே இன்னொரு வைரஸ்.. இரண்டு பேருக்கு பாசிட்டிவ் ஆகிருக்கு"..பகீர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாசிட்டிவ்

இந்நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி பேசிய கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ்,"கண்ணூரைச் சேர்ந்த 31 வயது நபர் தற்போது பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் உடல்நிலை நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இரண்டாவது தொற்று

முன்னதாக கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்த இப்பயணியை பரிசோதிக்கும் போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்று துபாயில் இருந்து கேரளா வந்த பயணிக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக்கிருப்பதன் மூலம், இந்தியாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | திடீர்னு கடல்ல உருவான புயல்.. தூக்கி வீசப்பட்ட படகுகள்.. ஷாக்-ஆகிப்போன மீனவர்கள்..!

KERALA, MONKEYPOX, PASSANGER, குரங்கு அம்மை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்