'இந்தியா'வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கிய... 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகம்... 'எதற்காக' தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு எதிராக விரைந்து துரித நடவடிக்கை நாடுகளில் இந்தியாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 100 மதிப்பெண் வழங்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த நாடுகள் துரிதமாக செயல்பட்டன என்பது குறித்து 73 நாடுகளில் ஆராய்ச்சி ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. பள்ளிகள் மூடல், பயணத் தடைகள், சுகாதாரத் துறையில் அவசர முதலீடு, நிதி நடவடிக்கை மற்றும் தடுப்பூசிகளில் முதலீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை வைத்து இந்த இதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மதிப்பெண்கள் வழங்கி இருக்கிறது.

இதில் இந்தியா 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. இந்தியா தவிர்த்து இஸ்ரேல், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளன. இத்தாலி, லெபனான், பிரான்ஸ் நாடுகள் 90 மதிப்பெண்களையும் ஜெர்மனி, அமெரிக்கா நாடுகள் 80-க்கு குறைவான மதிப்பெண்களையும் இங்கிலாந்து நாடு 70-க்கு குறைவான மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்