”கொரோனா'வ சும்மா தட்டி தூக்க 'இந்தியா'வால முடியும்...! இந்த ‘உலகத்துக்கே’ இந்தியா உதவி பண்ணப்போகுது...!” - ’முதல்’ தடுப்பூசி’ கண்டுபிடிப்பில் நம்பிக்கை தெரிவித்த 'பில்கேட்ஸ்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்று உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், உலகின் கோடீஸ்வரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் செய்தியாளர்களை வீடியோ கான்பரன்ஸ்  மூலம் சந்தித்தார். அப்போது பேசிய பில்கேட்ஸ், 'இந்தியாவில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.  அதே போல, இந்திய மருந்தியல் துறை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகளை சிறப்பாக செய்து வருகின்றது. அவர்கள் மற்ற நோய்க்கும் மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்' என தெரிவித்தார்.

மேலும், 'இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த  உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்' என தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 9.72 லட்சம் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,936 வரை உயிரிழந்துள்ளனர்.

அதே வேளையில், சுமார் 6 லட்சம் பேர், கொரோனா மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்