'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு அதிக அளவில் பரிசோதனை செய்வதால் தான் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ''அமெரிக்கா 2 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளைச் செய்துள்ளது. இது தான் பாதிப்பு அதிகமாகத் தெரிய முக்கிய காரணம் ஆகும். சீனாவிலும், இந்தியாவிலும் பரிசோதனைகளை அதிகரித்தால், அங்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
சீனா தான் விரோதி, அங்கிருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவர்கள் கட்டுப்படுத்த தவறி விட்டார்கள்'' எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இதற்கிடையே மத்திய அரசு தகவலின் படி இந்தியாவில் 40 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..!
- 'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'?.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்!
- ஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்!.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்!.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்!
- 'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க!'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- கொரோனா சிகிச்சைக்கு... இனிமே இந்த 'தடுப்பூசி' தான் பயன்படுத்த போறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- திருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலை தூக்குகிறதா கொரோனா?.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 'இளம் வயதினரை' குறிவைக்கிறதா கொரோனா!?.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- திறக்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்!.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?
- அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!
- 'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'?... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு!