'ஐ.நா.,' பாதுகாப்பு கவுன்சில் 'உறுப்பினரானது இந்தியா...' '184 ஓட்டுகளுடன்' அமோக 'வெற்றி...' 'ஓட்டு போட்ட' நாடுகளைப் பார்த்தால் 'ஆச்சரியம் அடைவீர்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 184 ஓட்டுகளுடன் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 184 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடந்தது.
இதில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. இதில் இந்தியாவுக்கு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் தேர்தலுக்கு முன்பே இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 184 ஓட்டுகள் இந்தியாவுக்கு விழுந்ததையடுத்து, இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. இந்தியா 8வது முறையாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்திய' எல்லைக்குள் 'சீன' ஹெலிகாப்டர்கள்... 'அத்துமீறி' பறப்பது 'அதிகரித்துள்ளது...' 'எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு...'
- 'லடாக்' மோதலில் இந்திய தரப்பில் '20 வீரர்கள் வீரமரணம்...' இந்திய ராணுவம் 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு...' 'சீன' தரப்பில் '43 பேர்' பலியானதாக 'தகவல்...'
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- 'பாகிஸ்தானில்' காணாமல் போன... இந்திய 'தூதரக' அதிகாரிகள்... பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
- "சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா?".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க!’
- 'இப்பதான் ஆரம்பிச்சிருக்கு...' 'நவம்பர்ல' தான் 'உச்சம்' தொடும்... ஐ.சி.எம்.ஆர். 'ஆய்வு' முடிவால் 'அதிர்ச்சி...'
- 'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...'
- 'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'
- 'கடைசில கண்டுபுடிச்சாச்சு...' 'எங்கிருந்து வந்துச்சுன்னா?...' 'சீனாவுல' இருந்து மட்டும் 'வரல...' 'அது மட்டும் கன்ஃபார்ம்...'
- "அடுத்த ஒரு வருஷத்துக்கு".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!'