'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது.

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது. இந்தவைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும், மருந்து நடைமுறைக்கு வர ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தற்போது நடைமுறையில் உள்ள சிறந்த மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

CORONA, AMERICA, DEATH TOLL, RISES, 1000

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்