பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றதில் ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்ததைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என அதன் உரிமையாளர் பெயரிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் சமீபத்தில் 8 குட்டிகளை ஈன்றது.
அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த விலங்கின ஆய்வாளர்கள் நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருக்கும் போது தாயின் கர்ப்பப் பையிலிருந்த திரவம் அந்த குட்டியை கறை படுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்டனர். ஆனால் அது எந்தவிதமான கதிர்வீச்சிற்கும் உட்படவில்லை’ என்றும் தெரிவித்தனர்.
‘பச்சை நிற குட்டி மற்ற குட்டிகளைப் போல சாதாரணமாகவே உள்ளது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என பெயரிட்டுள்ளோம்’ என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
- மீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- எங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...
- ‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...
- ட்ரெண்டிங்கில் 'World War 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...
- பொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... !
- ‘ட்ரோன் மூலம் தாக்குதல்’!.. ஈரான் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம்..!
- அமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி!...
- 'தேசப் பாதுகாப்புங்க! 10 ஆயிரம் இந்தியர்கள் கைது!'.. அதிரவைத்த அமெடிக்க குடிவரவு தணிக்கைத் துறை!