'காற்றில் உலவும் கொரோன மூலக்கூறு...' 'அவைதான் கொரோனா வேகமாக பரவ காரணமா?...' 'பீதியை கிளப்பும் சீன விஞ்ஞானிகள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறுகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில், விஞ்ஞானி, கி லன் தலைமையிலான குழுவினர், கடந்த, ஃபிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களில், 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை, 'ஜர்னல் நேச்சர்' இதழ் வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவைதான் கொரோனா வைரஸ் பரவ காரணமா என்பதை உறுதிப்படுத்த, மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்றோட்டமுள்ள நோயாளிகளின் அறைகளில், இந்த மூலக்கூறு அணுவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்பட்டது என்றும், அதேசமயம், குளிர்சாதன அறை, கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும், அதிகமானோர் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அகற்றி, வேறு உடைகளை அணியும் அறைகளிலும், கொரோனா மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவை தவிர கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பகுதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில், கொரோனா மூலக்கூறு அணு குறைவாகவே இருந்ததாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- "55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!
- 'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?
- 'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது?
- "ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ!
- ''சென்னையில் இந்த 6 ஏரியா பக்கம் போயிடாதிங்க...'' 'ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு...' 'பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு...'
- “கிட்ட வந்தால் கட்டிப் பிடித்துவிடுவேன்!”.. போலீஸாரையும், மருத்துவக்குழுவையும் மிரட்டிய கொரோனா நோயாளி!