'பூனை, நாய் கறி விற்கத் தடை...' 'லேட்டாக' விழித்துக் கொண்ட 'சீன நகரம்...' 'கொரோனா' கற்றுக் கொடுத்த 'பாடம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக சீனாவில் சென்ஜென் என்ற நகரில் முதல் முறையாக செல்லப்பிராணிகளான பூனை, நாய் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்ணில் படும் உயிரினங்கள் அனைத்தையும் உண்ணும் பழக்கம் இருப்பதால் தான் கொரோனா போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டை பல்வேறு நாடுகளும் குறைகூறி வந்தன.
இதுபோன்ற உயிரினங்களை சாப்பிடுவதால் அவற்றின் உடலில் உள்ள வைரஸ்கள் மாற்றம் பெற்று மனிதர்களை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை உட்கொள்வதை சீன அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் சென்ஜென் என்ற நகரில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் இறைச்சியை விற்பனை செய்யவும் சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வருடாந்திர யூலின் நாய் இறைச்சி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்புகள், தவளை மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றை சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எந்த இறைச்சியை சாப்பிட வேண்டும் என்றும் இச்சட்டம் மூலம் சென்ஜென் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 9 வகையான இறைச்சிகளை சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை பன்றிகள், மாட்டிறைச்சி, செம்மறி ஆடு, கழுதை, முயல், கோழி, வாத்து, புறா மற்றும் மீன் உணவுகள் உள்ளிட்டவைற்றை இறைச்சியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் அதன் தயாரிப்புப் பொருட்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சந்தை கண்காணிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சென்ஜென் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: 'கொரோனா ஆய்வுக்கு சென்ற மருத்துவக் குழு'... 'உள்ளூர் மக்களால் நேர்ந்த கடும் துயரம்'... '2 பெண் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!
- 'மக்களுக்கு வந்துள்ள பீதி'... 'இத கண்டிப்பா பண்ணாதீங்க'...தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய உத்தரவு!
- ‘தமிழகம் முழுவதும் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள மாநிலமாக அறிவிப்பு!’ - மாநில சுகாதாரத்துறை!
- ‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!
- 'இது என்ன புது தலைவலி...' இவங்களுக்கெல்லாம் 'அறிகுறிகளே இல்லை...' மீண்டும் உலகை 'பீதியில் ஆழ்த்தும்' சீனா...
- 'தொடங்கியது கொரோனா நிவாரணம்'...'தினமும் எத்தனை பேருக்கு'...'ரூ.1000 கூட என்னெல்லாம் இருக்கு'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- "தாலி கட்டுன புருஷனாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாது..." 'தடை விதித்த மனைவி...' 'கொரோனா குணமடைந்தாலும்...' 'விடாமல் துரத்தும் பயம்...' 'கணவனுக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'
- 'எங்க மொத்த கனவும் சிதைஞ்சு போச்சு'...'பிறந்து 6 வாரங்களே ஆன பிஞ்சு'...நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- 'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!