'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் ஆண்களை விட, பெண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களே அதிக அளவில் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே அது மாறுபட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 39 வயது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில், 40 முதல் 49 வயது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2.1 சதவீதம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்கள் 3.2 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர்.

அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்கள் 20.5 சதவீதமும், பெண்கள் 25.3 சதவீதமும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவைப் பொறுத்தவரை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே பெரும்பாலும் கவனிக்கத் தக்கதாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்