"எதிர்பார்க்கவே இல்லை..." "திடீரென இப்படி பரவும் என..." 'கொரோனா' தன் வேலையை காட்ட 'ஆரம்பிச்சிடுச்சு...' அட்வான்ஸாக '2000 கல்லறைகளுக்கு' ஏற்பாடு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றானன சிலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் தோண்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது தென்னமெரிக்க நாடுகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வளவு நாட்களாக மிதமாக இருந்து வந்த கொரோனா பரவல் தற்போது வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். தென்னமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் கொரோனா பரவலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் அண்டை நாடான சிலியிலும் கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 350 முதல் 500 வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்து 500 ஆக எகிறி உள்ளது.

இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக தலைநகர் சாண்டியாகோவில் கல்லறைகள் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக இறுதிச்சடங்கு செய்ய முன்னேற்பாடாக இந்த பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்