'பாகிஸ்தான்' ஊடகங்களாலேயே... 'பொறுத்துக்' கொள்ள 'முடியவில்லை'... 'சரியா பேசுங்க இம்ரான்...' 'திருத்திய பத்திரிகையாளர்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய பிரதமர்  மோடி பேசியதை திரித்து தவறான பொருள்படும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதை, பாகிஸ்தான் ஊடகம் சுட்டிக்காட்டி திருத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர  வேறு எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், வீடில்லாதவர்கள் போன்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள  அசவுகரியங்களுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கொரோனா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டார். அதனால்தான் பாகிஸ்தானில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்துவது மோசமான யோசனை என நினைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இம்ரான் கான் கூறியது தவறு எனவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகமான ‘ஜியோ நியூஸ்’ சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு, சிந்திக்காமல் எடுத்த முடிவு என  மோடி கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

CORONA, PAKISTAN, IMRNKHAN, MODI, MEDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்