எங்கள 'பழி' சொல்றதே 'வேலையா' போச்சு...! 'உங்களால ஒண்ணு ரெண்டு பேரு இல்ல...' 'ஒரு லட்சம்' பேர இழந்து நிக்குறோம்...! - ஐநா சபையில் கொந்தளித்த இம்ரான் கான்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காண் இந்தியா மற்றும் அமெரிக்கா குறித்து தன் கண்டன உரையை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 76-ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டம் கடந்த 21-ஆம் தேதியில் இருந்து 4 நாட்கள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பல உலக தலைவர்கள் கலந்து கொள்வதோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்கா சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உலக நாட்டுத் தலைவர்கள் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடன் ஏற்படும் வில்லங்கங்கள், சர்வதேச சர்ச்சைகள் குறித்து பேசுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (25-09-2021)  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா மற்றும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு குறித்து தன் கருத்தை எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய சபையில் அவரால் நேரால் கூட்டத்தில் கொள்ள முடியாத காரணத்தால் அவர் பேசிய ஆடியோ பொதுச்சபையில் ஒலிப்பரப்பட்டது.

அதில், 'அமெரிக்கா எப்போதும் ஆப்கானிஸ்தானின் இப்போதைய நிலைக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறிவருகிறது. ஆனால், ஆப்கான் மக்களின் இந்த துயர நிலைக்கு முழுமுதற் காரணம் அமெரிக்கா தான்.

முதன்முதலில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்கவே முகாஜிதீன்களுக்கு (இன்றைய தாலிபான்கள்) பயிற்சிக் கொடுத்து அவர்களை ஹீரோவாக்கியது. இப்போது அதன் பலனையும் அனுபவித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பாகிஸ்தானியர்களை இழந்தது தான் மிச்சம். இப்போது ஆப்கானில் ஆட்சியமைத்துள்ள தாலிபான் அரசு, பயங்கரவாதிகள் ஆப்கான் மண்ணை பயன்படுத்த முடியாத வகையில் அவர்கள் தடுப்பார்கள் என நம்புகிறேன்.

இந்தியாவில் இப்போது ஜனநாயக ஆட்சியை விட இந்துத்துவ ஆட்சியும், முஸ்லீம் எதிர்ப்பு அரசியலும் தான் நடைபெற்று வருகிறது. அவர்கள் இஸ்லாமியர்களை எந்த வழிகளிலெல்லாம் ஒடுக்க வேண்டுமோ அவ்வழிகளில் ஒடுக்கிறார்கள்.

பசு மாட்டுக்காக கொலைகள், கும்பல் வன்முறை, குடியுரிமை திருத்தச் சட்டம் என அனைத்தும் இஸ்லாமியர்களை ஒடுக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்.

இந்திய அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு எட்ட அழைத்தாலும், இதுவரை காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், காஷ்மீரின் சிறந்த தலைவரான சையது அலி கிலானி மரணித்த தருவாயில் அவரின் உடலை இந்திய அரசு வலுக்கட்டாயமாக பிடுங்கிச் சென்று, அடக்கம் செய்தனர். கிலானி அவர்களின் உடல் இஸ்லாமிய முறைப்படி முழுமையாக அடக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' இவ்வாறு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்