'எல்லாத்துக்கும் காரணம்...' 'டிரஸ் கம்மியா போடுறது தான்...' 'பாகிஸ்தான் பிரதமர் கூறிய சர்ச்சை கருத்து...' - வலுக்கும் கண்டனங்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஜூன்-20 அன்று எச்.பி.ஓவில் ஒளிபரப்பப்பட்ட ஆக்ஸியோஸின் பத்திரிகையாளர் ஜொனாதன் ஸ்வானுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பெண்கள் ஆடை, ஆண்களின் எண்ணம், இந்திய புலனாய்வு அமைப்பு மற்றும் சீனா குறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில், 'ஒரு பெண் அரை குறை ஆடைகளை அணிந்தால் அது ஆணின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இஸ்லாத்தில் இதற்கு தீர்வாக பர்தா இருக்கும். அதோடு, எங்களிடம் டிஸ்கோத்தேக்குகள் இல்லை, எங்களிடம் நைட் கிளப்புகள் இல்லை, எனவே இங்கே வேறுபட்ட வாழ்க்கை முறை உள்ளது' எனக் கூறினார்.
அதன்பின், ஒரு பெண்ணின் உடைகள் பாலியல் வன்முறையைத் தூண்ட முடியுமா என ஸ்வான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இம்ரான் கான், 'இந்த கேள்விக்கான பதில் நீங்கள் வாழும் சமுதாயத்தைப் பொறுத்தது. ஒரு சமூகத்தில் நான் மேற்கூறிய விஷயங்களைக் காணவில்லை என்றால், அது அவர்களுக்கு கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களைப் போன்ற ஒரு சமூகத்தில், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது' என பதிலளித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் படி அங்கு ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற 22,000 வழக்குகள் போலீசில் பதிவாகியுள்ளன.
தெற்காசியாவின் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் சட்ட ஆலோசகர் ரீமா ஓமர் இம்ரான் கானின் இந்த பேட்டிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில், 'பாகிஸ்தானில் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் பாதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் பழிபோடுவது ஏமாற்றமளிக்கிறது மற்றும் வெளிப்படையாக வருத்தமளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சுத்தமா காசு இல்லங்க...! 'வேணும்னா எங்க கழுதைகள தர்றோம்...' - வாங்கிய கடனுக்கு வித்தியாசமாக 'டீல்' செய்யும் நாடு...!
- ‘5 பேங்க் பாஸ்புக், 2 லேப்டாப்’!.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீது இந்தியாவில் இருந்து சூதாட்டம்.. அதிரவைத்த சம்பவம்..!
- "தோனி மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தா... இப்போ நடக்குறதே வேற"!.. தோனி கேப்டன்சி ஃபார்முலா!.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் விளக்கம்!
- ‘எனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் விராட் கோலி தான்’!.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ‘மனைவி’ அசத்தல் பதில்..!
- "அப்படி பேசாதீங்க"... "ஆனா அந்த மாதிரி யாராவது சொல்லும்போது"... கோலி பற்றிய ரகசியம்!.. போட்டு உடைத்த பாபர் அசாம்!
- 'நாங்க பாரபட்சம் பார்க்குறோமா?.. வந்து நீங்களே பாருங்க'!.. உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பிசிசிஐ!.. தரமான பதிலடி!
- 'வாய்க்கு வந்தத பேசாதீங்க'!.. பூதாகரமான சம்பள பாக்கி சர்ச்சை!.. மர்மங்களை உடைத்த பிசிசிஐ அதிகாரி!.. நடந்தது என்ன?
- என்ன இப்போ லாட்டரி அடிக்கவா போகுது...? 'டிக்கெட்டை தூக்கி கடாசிட்டு போயிருக்காங்க...' 'இந்திய வம்சாவளி பெண் செய்த 'காரியத்தினால்' அடித்த ஜாக்பாட்...!
- 'பணத்தை செட்டில் பண்ணாத பிசிசிஐ'!.. வருடக் கணக்கில் வீரர்களுக்கு பிரச்சினை!.. அதிரவைக்கும் பின்னணி!
- 'இனி அவர யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'!.. கோலி மீது எழும் 'அந்த' விமர்சனத்துக்கு... முன்னாள் பாகிஸ்தான் வீரர் பதிலடி!