இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1, ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாகவே உக்ரைன் நாட்டின்  விமானம் வெடித்து சிதறியது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

2, பொன்னேரி அருகே மேட்டுப்பாளையத்தில் பாஜக பிரமுகர் ஜானகிராமன் வீட்டின் பூட்டை உடைத்து 450 சவரன் நகைகளையும், 20 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

3, ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

4, இந்தியா இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

5, ஜேஎன்யூவில் நடந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

6, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

IRAN, AMERICA, UKRAINIANPLANECRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்