இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. எல்லைப்பகுதியில் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டு வந்த பாக்., ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

2. தமிழகத்தில், ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று துவங்குகிறது. எம்.எல்.ஏ.,க்கள், 10 பேரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே, வேட்பு மனு ஏற்கப்படும். தமிழகத்தில் உள்ள கட்சி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைப்படி, அ.தி.மு.க., - தி.மு.க.,வும், தலா, மூன்று எம்.பி.,க்களை தேர்வு செய்ய முடியும்.

3. அயோத்தியில், தற்போது உள்ள தற்காலிக கோவிலிலிருந்து, ராமர் சிலையை வேறு இடத்துக்கு மாற்றும் பணியை, கோவில் அறக்கட்டளை துவக்கியுள்ளது.

4. கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் அருகே சாலையோரத்தில் கார் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.

5. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 107 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 3750 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து, அது தனித்தேர்வர்களுக்காக அனுப்பப்பட்டது என கல்வி தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

7. சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

8. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் நபர் பலியாகியுள்ளார். மேற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர்  உயிரிழந்து விட்டதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் வொய்ட்டி தெரிவித்துள்ளார்.

9. கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 30 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 3042 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நேற்று புதிதாக 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

10. ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

INDIAN ARMY, PAKISTAN, AYOTHI, KARNATAKA ACCIDENT, IRAN, 8TH BOARD EXAM, ENGLAND, CORONA, CHINA, INDIAN WOMEN CRICKETER, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்