இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

2. சந்திரயான்-3 விண்கலம், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விண்ணில் செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். விண்கலத்தின் தரம், வடிவமைப்பு, திறன் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தாா்.

3. ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று  ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை பட்டியலை கொண்டு வரும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

4. பொது துறையைச் சேர்ந்த 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதென, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

5. நாமக்கல்லில், 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம், விருதுநகரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சி.ஐ.டி. போலீசாருக்கு ராம்நகர் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக மத்திய அரசின் மூலமாக சர்வதேச போலீசாரின் உதவியை நாட சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

7. கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா மட்டுமின்றி, அனைத்து விதமான தொற்று நோய்களும் பரவாமல் தடுக்க முடியும் என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

8. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வைரசை கட்டுப்படுத்தி சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 8.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் கைக்குலுக்குவதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக 'நமஸ்தே' கூறும் இந்தியர்கள் வழியை பின்பற்றலாம் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.

10. கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 80 ஆயிரத்து 409  பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

PARLIAMENT, CHANDRAYAAN, RAJINIKANTH, AIRINDIA, EDAPPADI PALANICHAMI, NITHYANANDA, CORONA, AMERICA, ISRAEL, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்