இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. பூமியை கண்காணிக்கும், 'ஜிஐசாட் - 1' செயற்கைக்கோளை, 'இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 10' ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது.
2. இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம், இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அதிரடியாக கலைத்ததையடுத்து, ஏப்ரல் 25ம் தேதி, அங்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
3.'கொரோனா' வைரசால், எச்சரிக்கையடைந்துள்ள கர்நாடக அரசு, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மாநிலம் முழுவதும், 'ஹை அலர்ட்' அறிவித்துள்ளது. இத்தகைய வைரஸ் பரவாமல் தடுக்க, மாவட்டம், தாலுகா, பேரூராட்சி மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நாளை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். இதில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. வரும் 26-ம் தேதிவரை நடைபெறும் இந்தத் தேர்வு காலை 10 மணிமுதல் மதியம் 1.15 வரை நடைபெறுகிறது.
6. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சிலர் தரமற்ற குடிநீரை கேன்களில் அடைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
7. கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி - ரூ.382 கோடியும், அரியலூர் - ரூ.347 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8. மேற்கு வங்கத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு நபரைக் கூட மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய மம்தா இங்கு வாழும் எந்த ஒரு அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
9. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த தங்கள் நாட்டைச்சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
10. அமெரிக்காவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. 90-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
11. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "யோகா செய்தால் கொரோனா தாக்காது!" -'யோகி ஆதித்யநாத்'... "இது தெரியாம ஒரு மூவாயிரம் பேர் செத்துட்டாங்களே..." "சீன அதிபர் கண்ணில் படும் வரை இந்த செய்தியை பரப்பவும்..."
- "கடைசில எங்களையும் டிக்-டாக் பண்ண வச்சிட்டிங்களே...!" "வதந்திகளைத் தடுக்க எங்களுக்கு வேற வழி தெரியல..." 'கொரோனாவுக்கு' எதிராக களத்தில் இறங்கிய 'WHO'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "கொரோனா மட்டும் நாட்டுக்குள்ள வந்துச்சு..." "தொலைச்சு கட்டிருவேன்..." "தலைவனுக்கு பயப்படுவதா?... கொரோனாவுக்கு பயப்படுவதா?" விழி பிதுங்கும் 'வடகொரிய' அதிகாரிகள்...
- "கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும்..." "விசில் அடிக்கணும்..." "யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும்..." "அவர்தான் அதிமுக காரர்..." அமைச்சரின் 'அதிரடி' பேச்சு...
- WATCH TEASER: ‘காட்டுக்குள் மாஸ் காட்டும் ரஜினி’... ‘ஒளிபரப்பு தேதியை அறிவித்து’... 'டீசரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல்'!
- 'தமிழ்ப்புத்தாண்டில் உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' இருக்கு'... ரஜினியின் சகோதரர் அதிரடி!