இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. 40க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய டில்லி கலவரம் ஓய்ந்து தற்போது முழு அமைதி நிலவுகிறது. வன்முறை தூண்டுவோர், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர்.
2. தமிழகம் முழுவதும், இன்று பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்கியது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறுகின்றன.
3. உலகம் முழுவதும் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
4. பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் 20 ஆயிரத்து 569 கோடி ரூபாயும் மாநில ஜி.எஸ்.டி. மூலம் 27 ஆயிரத்து 348 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 48 ஆயிரத்து 503 கோடி ரூபாயும் கூடுதல் வரி மூலம் 8 ஆயிரத்து 947 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
5. டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. அதேபோல், டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
6. குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருவதாலும், குடிநீர் உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாகவும் சென்னையில் தண்ணீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
7. சாம்னா' நாளிதழ் ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார். 'சாம்னாவின் நிர்வாக ஆசிரியராக சஞ்சய் ராவத் நீடிப்பார் என்றும் வழக்கம்போல் கட்டுரை, தலையங்கம் எழுதுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. மெக்சிகோ சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரைட்சை நேர்செட்களில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
9. நியூசிலாந்தில் நடந்த இந்தியாவுடனான 2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது.
10. அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முதல் நகைகளை ‘ஹால்மார்க்’ முத்திரையுடன் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. அதேபோல 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என 3 கிரேடுகளில் மட்டுமே தங்கம் விற்பனை செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத விட பெஸ்ட் 'கேட்ச்' காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட்'... காற்றில் மிதந்த 'ஜடேஜா'வுக்கு ஆன்லைனில் பறக்கும் 'மீம்ஸ்'கள் .. வைரலாகும் 'வீடியோ'
- "கொரோனா மட்டும் நாட்டுக்குள்ள வந்துச்சு..." "தொலைச்சு கட்டிருவேன்..." "தலைவனுக்கு பயப்படுவதா?... கொரோனாவுக்கு பயப்படுவதா?" விழி பிதுங்கும் 'வடகொரிய' அதிகாரிகள்...
- ‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’!
- 'ஐ.பி.எல் போட்டிகள் வேணாம்'.. அதே 'எனர்ஜி'ய இங்க காட்டுங்க.... இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறும் 'கபில் தேவ்'
- "கொடுத்த கடனையா திருப்பிக் கேக்குற..." ஒரே ஒரு 'வதந்திதான்'... ஒட்டுமொத்தமா சோலிய 'முடிச்சுட்டான்'...
- கொரோனாவுக்கு 'நோ சிகிச்சை'... 'நோ பயம்'... 'பூரண குணம்'... பிறந்த குழந்தையின் 'அபார' நோய் எதிர்ப்பு சக்தி... 'மருத்துவர்கள் ஆச்சரியம்!'...
- ‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!
- "இப்போ எப்படி வந்து தாக்குதுன்னு பாக்குறேன்..." "கொரோனான்னா என்ன பெரிய கொம்பா.... யாருகிட்ட... " பாதுகாப்புக்காக 'விமானப்பயணிகள்' செய்த 'விநோத' செயல்... 'வைரல் வீடியோ...
- ‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!
- என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...